பாராளுமன்றத்துக்கு அருகே மிகுந்த பாதுகாப்புடன் இயங்கும் தூதரகப்பகுதியில், காங்கிரஸ் மகளிர் எம்பி சுதா மீது நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சபாநாயகருக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்ததோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மின்னஞ்சல் மூலம் புகார் எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் ல் நாடாளுமன்றம் வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயின் பறிக்கப்படும் போது தனது கழுத்து பலமாக இறுக்கப்பட்டதாகவும், அந்த நிலையில் தன்னுடைய உயிரே பறிபோயிருக்கக்கூடிய நிலை ஏற்பட்டதாகவும் சுதா தெரிவித்துள்ளார். “நான் ஒரு மகளிர் எம்பி, எனக்கு இது நடந்தால் சாதாரண மகளிருக்கு என்ன நடக்கும்? பாதுகாப்பு எங்கே?” என்று கேள்வி எழுப்பிய அவர், இது தனக்கு நடந்த ஒற்றை சம்பவம் அல்ல, நாட்டின் அனைத்து பெண்களுக்கும் உரிய உரிமை மற்றும் பாதுகாப்பை குறிக்கும் விடயம் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த சம்பவம் மகளிர் பாதுகாப்பு குறித்த மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பாராளுமன்றத்தின் நடுவே நடைபெறுவது, தேசிய பாதுகாப்பு மேலாண்மையின் மீதான பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, 4 கிலோமீட்டர் சுற்றளவில் வாகன சோதனைகள், அனுமதி கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த நிலையில், இத்தகைய சம்பவம் ஏற்படுவது வெறும் தவறாக மட்டும் பார்க்க முடியாது என பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். இந்த பரபரப்பு புகார் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.