சமீப காலமாக ஏர் இந்தியா விமானம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அடிக்கடி விமானத்தில் பழுது ஏற்படுவதால் ஏர் இந்தியா அதிகாரிகள் பயணிகளுக்கு பாதுகாப்பான சேவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏர் இந்திய விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் ஒரு கரப்பான் பூச்சியும் இருந்தது. விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகள் கரப்பான் பூச்சி இருப்பதாக கூறி வேறு இருக்கைக்கு மாற்றப்பட்டனர். விமானத்தில் தூய்மை பணிகள் நடந்தாலும் சில நேரம் பூச்சிகள் விமானத்தில் வந்து விடுகிறது. இந்த பூச்சிகளால் பயணிகளுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.