கர்நாடக மாநிலம் சோழதேவன ஹள்ளி பகுதியில் பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் உரிமையாளர் அஷ்ரப். இவருக்கு வயது 37. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் இந்த விடுதியில் அறை எடுத்து தங்கினார். இந்த மாணவியுடன் அஷ்ரப் ஜாலியாக பேசி பழகியுள்ளார்.
கடந்த 1-ஆம் தேதி மாணவி விடுதி வாசலில் நின்று கொண்டிருந்தபோது அஷ்ரப் காரில் வந்து ஜாலியாக ஒரு ரைட் சென்று வரலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி மாணவி அவருடன் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி அஷ்ரப் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவரிடம் இருந்து தப்பித்து வந்த மாணவி நடந்தவற்றை கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அஷ்ரப்பை கைது செய்தனர். தற்போது மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.
