டெல்லி நங்லாய் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவர் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பிகா விஹார் காலனியில் வசித்து வந்த அந்த சிறுவன், பள்ளிக்கு விடுமுறை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசாரின் தகவலின்படி, அந்தக் சிறுவனின் செல்போனை பரிசோதித்ததில், அந்த நாள் முழுவதும் சுமார் 10 முதல் 11 மணி நேரம் வரை செல்போன் பயன்படுத்தியதாக தெரிந்தது. அதில், 7 மணி நேரம் வீடியோ கேம் விளையாடியதுடன், 4 மணி நேரம் யூடியூப் காணொளிகளை பார்வையிட்டிருந்தான்.

சிறுவன் அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருந்ததால் பெற்றோர் கண்டித்ததாலோ அல்லது விளையாட்டில் தோல்வி அடைந்ததாலோ மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.