மும்பை போரிவாலி ரயில்நிலையத்தில் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுடன் முதல்தர பெட்டியில் பயணித்த நபர் ஒருவர், டிக்கெட் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலக பொருட்களை உடைத்ததால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
ராகுல் சுனில் ரசால் என்ற நபர், ஒரு தோழி மற்றும் சிறுவன் ஆகியோருடன் ஜீப்தானி நோக்கி செல்லும் ரயிலில் முதல்தர பெட்டியில் பயணித்துள்ளார். டிக்கெட் சோதனைக்காக வந்த TC, அவரிடம் இரண்டாம் வகுப்பு டிக்கெட் மட்டுமே இருப்பதை கண்டார்.
View this post on Instagram
மேலும், சிறுவனிடம் எந்த டிக்கெட்டும் இல்லாதது தெரியவந்தது. இது தொடர்பாக அபராதம் விதிக்க TC அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற போது, ராகுல் எதிர்ப்புத் தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலகத்தில் உள்ள பொருட்களை உடைத்து நொறுக்கியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் GRP அதிகாரிகள் விரைந்து வந்து ராகுலை கைது செய்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 132 மற்றும் 324(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.
