தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள அடவிதேவுலபள்ளி மண்டலத்தில், கள்ளத்தொடர்பில் இருந்த ஆணையும், பெண்ணையும் கிராம மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாயக்குனி தாண்டாவைச் சேர்ந்த ரமேஷ் என்றவர், மொலகாச்செர்லா கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் சில காலமாக உறவில் இருந்துள்ளார். இருவரும் திருமணமானவர்கள். இது தவறு என இரு குடும்பங்களினரும் முன்பே எச்சரித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் உறவை தொடர்ந்ததற்காக, கிராம மக்கள் தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
వివాహేతర సంబంధం కొనసాగిస్తున్న జంట.. దేహశుద్ధి చేసిన గ్రామస్తులు
నల్గొండ జిల్లా అడవిదేవులపల్లి మండలంలో ఘటన
స్థానిక మొలకచర్ల గ్రామానికి చెందిన వివాహితతో గత కొంతకాలంగా అక్రమ సంబంధం పెట్టుకున్న నాయకుని తండాకు చెందిన వివాహితుడు రమేష్
ఇరు కుటుంబాలకు చెందిన పెద్దలు ఇది తప్పుని… pic.twitter.com/LGY92KlZ9L
— Telugu Scribe (@TeluguScribe) August 2, 2025
சம்பவம் நடந்த நேரம் குறித்து தெளிவான தகவல் இதுவரை இல்லை. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதா என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பொதுமக்கள் தண்டனை வழங்கும் இந்த செயல் குறித்து சமூகத்தில் விமர்சனமும் எழுந்துள்ளன. உரிமை மீறல் மற்றும் சட்டத்துக்கு புறம்பான இந்த நடவடிக்கையை கண்டித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
