ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திரமான தம்பதியின் பகீர் மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு கோசாலையில் சந்தித்து, காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சாலையில் வாகனங்களில் செல்பவர்களிடம் நயமாகப் பேசி லிஃப்ட் கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதோடு வாகனத்தில் ஏறிய பிறகு, கத்தி அல்லது ஆயுதங்களைக் காட்டி மிரட்டியோ அல்லது ஏமாற்றியோ காரில் உள்ளவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை இந்த தம்பதியினர் கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டோரிடம் இவர்கள் இதே பாணியில் லிஃப்ட் கேட்டு, பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், பஞ்ச்குலா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி இந்த தம்பதியினரைக் கைது செய்துள்ளனர்.

அதுமட்டும்மல்லாமல் மாட்டுத் தொழுவத்தில் தொடங்கிய இவர்களது காதல் கதை, இறுதியில் லிஃப்ட் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்யும் குற்றக் கூட்டாளிகளாக மாறி, தற்போது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் முடிவடைந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.