ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூரை சேர்ந்த 18 வயது இளம்பெண் சுமித்ரா பிரமாணிக். இவர் சம்பவ நாளன்று தனது தோழியுடன் கர்காய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுமித்ரா தனது காதலனுடன் மொபைல் போனை பேசிக்கொண்டே தோழியுடன் சென்றபோது திடீரென சுமித்ராவுக்கும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த அவரது காதலருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மனம் உடைந்த சுமித்ரா திடீரென ஓடி சென்று பாலத்தின் தடுப்பு சுவரின் மீது ஏறி ஆற்றுக்குள் நொடிப்பொழுதில் குதித்துள்ளார். அதனைப் பார்த்த அவரது தோழி செய்வதறியாது தனது தோழியை காப்பாற்றுமாறு கதறி துடித்துள்ளார்.
அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புப்படையினர் ஆற்றில் குதித்த சுமித்ராவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை சுமித்ரா கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்பு படை வீரர்கள் தொடர்ந்து ஆற்றில் சுமித்ராவை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
