சமூக ஊடகங்களில் தற்போது ஒரு ரொட்டி சுடும் வீடியோ மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சமையல்காரர் மிகவும் வேகமாகவும் வித்தியாசமான முறையிலும் ரொட்டியை சுடுகிறார்.

ரொட்டி சுடும் வேகத்தையும், அவர் செய்யும் நுட்பத்தையும் பார்த்து மக்கள் திகைத்து போயுள்ளனர். அந்த மனிதர் ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். முன்னமே உருட்டி வைக்கப்பட்ட ரொட்டிகளை, ஒரு பக்கமாக அடுப்பில் வைத்தவுடன் சில விநாடிகளில் சுட்டுவிடுகிறார்.

அந்த சமையல்காரர் பயன்படுத்தும் அடுப்பு மிக அதிக சுடர் கொண்டது. அதில் அவர் ரொட்டியை  வேகமாகவும், மிக துல்லியமாகவும் அதை சுடுகிறார். இது சாதாரணமாக தெரியக்கூடிய வேலை அல்ல, பல வருட அனுபவமும் பயிற்சியும் இருந்தால்தான் இப்படி செய்ய முடியும். அவர் ரொட்டி சுடும் திறமை, ஒரு ஸ்டண்ட் போலவே உள்ளது என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான பேர் லைக் செய்து, லட்சக்கணக்கான பேர் பார்த்து வருகிறார்கள். வீடியோவை பார்த்த மக்கள், “இவ்வளவு வேகமா சுடுவாரா?”, “இதுதான் உண்மையான கைவினைஞர்” என்றெல்லாம் பாஸிட்டிவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.