திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சமந்தா. திருநங்கையான சமந்தாவை அவரது உடன் பிறந்த தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கை சமந்தா இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு வந்தார்.
இதனை பார்த்த நண்பர்களும் உறவினர்களும் கேலி செய்ததால் சமந்தாவின் தம்பி அமர்நாத் தனது அக்காவை நத்தத்திற்கு வரவழைத்தார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அமர்நாத் சமந்தாவை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த சமந்தா மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தனது தம்பி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
