விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பேருந்தில் பயணம் செய்த போது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் முன்புற வாசலுக்கு அடுத்ததாக இருக்கும் முதல் இருக்கையில் பெண் ஒருவர் தனது 10 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

பேருந்து சென்று கொண்டிருந்த போது டிரைவர் திடீரென சடன் பிரேக் பிடித்ததால் அவருக்கு அருகே குழந்தையுடன் அமர்ந்திருந்த நபர் கீழே விழுந்தார். இதே போல அந்த பெண்ணின்  10 மாத குழந்தையும் தவறி கீழே விழுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஓடிப்போய் தனது குழந்தையை தூக்குகிறார். இந்த சம்பவத்தால் பேருந்தில் இருந்த அனைவரும் திகைத்துப் போயினர். குழந்தை பேருந்தில் இருந்து கீழே விழுந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.