சென்னையில் இன்று சிலிண்டர் விலை குறைந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி என்பதால் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் போன்று இந்த மாதமும் வணிகம் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.33.50 காசுகள் குறைந்து 1789 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டன் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இதனால் வீட்டுக்கு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
