இன்றைய காலகட்டத்தில் வங்கிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய அவசியம் என்பது ஏற்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக யுபிஐ பண பரிவர்த்தனைகள் போன்றவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தினசரி வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்பது குறைவது கிடையாது. இதன் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை வந்தால் வாடிக்கையாளர்கள் சற்று சிரமப்படுவார்கள் என்பதால் விடுமுறையை முன்கூட்டியே கணக்கிட்டு வங்கி வேலைகளை முடித்துக் கொள்வது அவசியம்.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி என்பதால் இந்த மாதத்தில் உள்ள வங்கி விடுமுறைகள் குறித்து பார்ப்போம். இந்த மாதத்தில் மட்டும் மொத்தமாக வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 9 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை. அதன்பிறகு ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி கோகுலாஷ்டமி, ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி போன்றவைகளை முன்னிட்டு அரசு விடுமுறை. மேலும் மொத்தமாக இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை வருவதால் இதனை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் திட்டமிட்டு வங்கி வேலைகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.