தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில், கிராம உதவியாளர் பணிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 2,300 பணியிடங்கள் உள்ளன.
பணியிடம்: கிராம உதவியாளர் (Village Assistant)
மொத்த காலியிடங்கள்: 2,300
சம்பளம்: மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025
தகுதி விவரங்கள்:
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தமிழ் மொழியை 10ஆம் வகுப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்
தேர்வில் தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
காலியிடங்கள் உள்ள கிராமம்/தாலுகாவில் நிரந்தரமாக வசித்து வர வேண்டும்
மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், எழுத தெரிந்திருத்தல் அவசியம்
நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும்
தேர்வாகும் நபரின் மனைவியோ/கணவரோ உயிரோடு இருக்கும்போது வேறொரு திருமணம் செய்திருக்கக் கூடாது.
வயது வரம்பு:
பொதுப்பிரிவினருக்கு: 21 முதல் 32 வயது வரை
பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி: 37 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கிராம நிர்வாகம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படலாம்.
நேர்முகத் தேர்வின் போது, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
www.tn.gov.in இணையதளத்தில் உள்ள “What’s New” பகுதியில் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது
அதனை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, காலியிடங்கள் உள்ள மாவட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
கூடுதல் தகவலுக்கு:
தங்களது கிராம ஊராட்சி அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அல்லது மாவட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் மற்றும் பணியிட விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
முக்கிய குறிப்பு:
விண்ணப்பங்கள் 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் மட்டுமே ஏற்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் காலம் தாழ்த்தாமல் விண்ணப்பிக்க வேண்டும்.
