தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் விஜய் விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியதாவது, எங்கள் கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணிக்கு மீண்டும் மகுடம் சூட மக்கள் தயாராக இருக்கின்றனர். நடிகர் விஜய் 1967 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் நடந்தது போன்று 2026 ஆம் ஆண்டிலும் மாற்றம் வரும் என்கிறார். அவர் சொன்னபடி நிச்சயமாக மாற்றம் வரும். ஆனால் 2026 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவுக்கு சென்று விடுகிறேன் என்று கூறிவிட்டு விஜய் சென்று விடுவார். அவர் மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என்று கூறிவிட்டு கண்டிப்பாக தேர்தலுக்குப் பிறகு சினிமாவுக்கு சென்று விடுவார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றி பேரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தை தொடங்கட்டும். அந்தர்பல்டி ஆகாச பல்டி என எவ்வளவு அடித்தாலும் எவ்வளவு வித்தை காட்டினாலும் மக்களிடம் காசு பெறும்போது இறங்கி தான் வரவேண்டும். பொதுமக்களிடம் ஓட்டு என்ற மகத்தான சக்தி இருக்கிறது. அந்த மகத்தான சக்தி எங்கள் முதலமைச்சரிடம் இருப்பதால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். வென்று காட்டுவோம் என்றார்.
மேலும் 1967 மற்றும் 1977 ஆகிய தேர்தல்களில் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதேபோன்று 2026 ஆம் ஆண்டு தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜயும் முதல் தேர்தலில் வெற்றி பெற்று அதே வரலாற்றை மீண்டும் கொண்டு வருவேன் என கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
