நாடாளுமன்றத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் மீதான உரை நடைபெறும் நிலையில் ராகுல் காந்தி போரை நிறுத்தியது நான்தான் என ட்ரம்ப் கூறியது ஏன் எனவும் அவர் போரை நிறுத்தவில்லை என உங்களால் சொல்ல முடியுமா என கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இது பற்றி பிரதமர் கூறியதாவது, ஆப்ரேஷன் சிந்தூரின் போது நாங்கள் ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் கொடுத்தோம்.

ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பகல்காம் தாக்குதலுக்கு இந்தியா 22 நிமிடங்களில் பழி தீர்த்தது. பாகிஸ்தானின் பெரும்பாலான விமானப்படைத்தளங்கள் இன்னும் ஐசியூவில் உள்ளது. உலகமே இந்தியாவிற்கு ஆதரவாக இருந்த நிலையில் காங்கிரஸ் மட்டும் தான் நம்முடைய படைகளை கொண்டாடவில்லை.

சிந்தூரில் இருந்து சிந்து வரை அனைத்து தீவிரவாத தாக்குதல்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும். எந்த ஒரு தலைவரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கூறவில்லை. போரை தீவிர படுத்த விரும்பாததால் நாங்கள் தான் போரை நிறுத்தினோம். ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் நிறுத்தப்படவில்லை தொடர்கிறது. குண்டுகளுக்கு குண்டுகளால் தான் பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் இந்தியாவிடம் கெஞ்சி மன்றாடியது அதனால் தான் போரை நிறுத்தினோம்.

பாகிஸ்தான் எங்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதால் இனியும் போரை தொடர வேண்டாம். இனிமேல் தாக்கினால் தாங்கும் வலிமை கிடையாது என DGMO-வை அழைத்து பாகிஸ்தான் கெஞ்சியது. மேலும் ஒரு மணி நேரமாக அமெரிக்க துணை அதிபர் என்னிடம் பேசுவதற்காக முயற்சி செய்த நிலையில் நான் அவரது அழைப்பை எடுக்கவில்லை என்றார்.