அகமதாபாத் விமான விபத்தின் போது நிகழ்ந்த ஒரு உணர்ச்சி பூர்வமான சம்பவம், தாயின் அன்பிற்கு ஈடாக ஏதுமில்லை என்பதை மறுபடியும் உறுதிப்படுத்தியுள்ளது. மனுஷா கச்சாரியா என்ற பெண், விமான விபத்துக்குப் பிறகு தங்கியிருந்த மருத்துவ விடுதியில் தீப்பற்றிய நேரத்தில், தனது குழந்தையை மார்போடு அணைத்து, உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார். அந்தச் சஞ்சலமான தருணத்தில் கணவர் அருகில் இல்லாத சூழலில், தன்னையும் பொருட்படுத்தாமல் குழந்தையை அழைத்துக் கொண்டு விரைந்து வெளியேறியிருக்கிறார்.
அதின்போது, பற்று எறிந்த தீ, தாய் மற்றும் குழந்தை இருவரையும் சூழ்ந்ததால், மனுஷாவுக்கு 25 சதவீதமும், குழந்தைக்கு 36 சதவீதமும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் அருகிலுள்ள கே.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனது குழந்தையின் நிலையை பார்த்ததும் மனுஷா உணர்ச்சியடைந்தார். மருத்துவர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற, உடனடி தோல் தானம் தேவைப்படுவதாக கூறிய நிலையில், தாயான மனுஷா தன் காயங்களைக் கவனிக்காமல், தனது தோலைத் தானமாக வழங்கி மகனை காப்பாற்ற முனைந்தார்.
தீவிர சிகிச்சையின் பின் தாயும் சேயும் தற்போது நிலைமையிலுள்ள நிலையில், இந்த செய்தி சமூகத்தில் பெரும் பரவலையும் கருணையையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வருகை தரும் பலர், இந்த தாயின் தீரா பாசத்தையும் துணிச்சலையும் கண்டு கண்களில் கண்ணீர் வடிக்கின்றனர். ‘தாயின் அன்புக்கு உலகில் மாற்று இல்லை’ என்பதற்கான இன்னொரு சான்றாக, மனுஷாவின் செய்தி இப்போது நெடுநேரம் பேசப்படும் மனதை உருக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.
