நாடாளுமன்றத்தில் இன்று ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது கனிமொழி எம்பி கூறியதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தோணியில் அமைச்சர் பேசினார். தேசபக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல. தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டு கொடுக்கவில்லை.

இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நின்றவர் முதலமைச்சர். மு க ஸ்டாலின். பிரதமர் மோடி பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போதெல்லாம் என்ன செய்கிறார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றாரா? மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்த போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள். பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு? என கனிமொழி எம்பி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.