ஹைதராபாத்தைச் சேர்ந்த நிசாந்த் சபூ என்பவர், பிரபல சூப்பர் கார்களுக்கான கம்பனியான சீராமிக் ப்ரோ ஹைதராபாத் நிறுவனத்தின் உரிமையாளர். அவரிடம் ரூ.4 கோடி மதிப்புடைய லாம்போர்கினி ஹுராகன் பெர்ஃபார்மன்டே கார் உள்ளது. இவர் சமீபத்தில் செய்த மனிதநேயச் செயல் இணையத்தில் பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.
ஒரு தெரு ஜூஸ் கடையில் ஜூஸ் வாங்க சென்ற நிசாந்த் சபூ, அடுத்த நாள் மீண்டும் அதே கடைக்கு சென்று, “நேற்று குடித்த ஜூஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு” என கடை ஊழியரை பாராட்டினார். பின்னர், “இந்த ஜூஸ் இன்னிக்கி குடிக்க மாட்டேன்… நீங்க என்னோட காரில் வந்தால் தான் குடிப்பேன்” என்று கூறுகிறார். கடை ஊழியரும் அவருடன் மகிழ்ச்சியாக சென்றார்.
View this post on Instagram
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானவுடன், வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் “இதுதான் உண்மையான நற்பண்பு”, “நிஜமா மனித நேயம் என்னவென்று சொல்லிக்காட்டியிருக்கும் நிசாந்த் சர்”, “நாங்கள் சூப்பர் கார்களை அல்ல, நிசாந்த் சர் மாதிரியான நபர்களை மதிக்கிறோம்” எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு சாதாரண வியாபாரிக்கு கிடைத்த இந்த அனுபவம், பலரது மனதையும் கவர்ந்துள்ளது.
