தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குஜராத் கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதேபோன்று மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்த வகையில் இன்று தமிழகத்தில் மணிக்கு சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் தரைக்காற்று வீசுவதோடு பரவலாக மழை பெய்யும். இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று வருகின்ற 30-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
