கர்நாடக மாநிலம் பெங்களூர் மகுடி சாலையில் ஒரு பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை இரவில் ஊழியர்கள் அடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி துப்பாக்கியுடன் 3 பேர் கடைக்குள் நுழைந்தனர். பின்னர் அந்த மர்மநபர்கள் நகை கடை உரிமையாளரை மிரட்டி 184 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றனர்.
அப்போது எதிர்ப்பு தெரிவித்த நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியை காட்டி அவர்கள் மிரட்டினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர் இது குறித்து படையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
