இன்றைய காலகட்டத்தில், அலங்காரம் என்ற பெயரில் பலர் ஆபத்தான முறைகளை பயன்படுத்தி வருவது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில், ஒருவரது தலைமுடிக்கு தீவைத்து முடி வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர், ஒரு எரியும் தீக்குச்சியைத் தனது தலைமுடிக்கு அருகில் கொண்டுவந்து, அதனைக் கொண்டு முடியை தீ வைத்துத் சீவுகிறார். இதனைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Ghost Rider 😭 pic.twitter.com/uO2uIPwI8L
— reverie keona (@reveriekeona) July 25, 2025
இந்த வீடியோவை “reveriekeona” என்ற பயனர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்து பரபரப்பான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். “வந்த ஃபேஷனுக்கு இப்படி உயிரோடு விளையாடற மாதிரி இருக்கு”, “இது முடி வெட்டுறதா, உயிர் வெட்டுறதா?”, “இப்படி ரிஸ்க் எடுத்து ஸ்டைல் பண்ணனுமா?” என பலர் விமர்சனங்களையும் கலவையுடன் பதிவிட்டுள்ளனர்.
தலையில் தீ வைப்பது போன்ற ஆபத்தான சிகை அலங்கார முறைகள் தற்போது பரவலாக பரவத் தொடங்கி இருக்கின்றன. இது போன்ற செயல்கள் நேரில் பார்ப்பவர்களையே பதற வைக்கின்றன. மருத்துவ நிபுணர்களும், சிகை அலங்கார நிபுணர்களும் இதுபோன்ற ஆபத்தான நடைமுறைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். இவை உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்பது நிபுணர்களின் ஆலோசனை.
