பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும் கொண்டாடும் விதமாக ஜூலை 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஆடி திருவாதிரைவிழா நடைபெற்றது.
இன்று பிரதமர் மோடி சோழவந்தம் ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக ஹெலிபேட்டில் வந்து இறங்கினார். வழிநடுக சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருக்கும் மக்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்துள்ளார். பின்னர் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், சிதம்பரம் எம்.பி., திருமாவளவன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது இளையராஜா இசையில் ஓம்சிவோஹம் பாடல் பாடப்பட்டது. அதனை பிரதமர் ரசித்து பார்த்தார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
#WATCH | இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சியை மனமுருகி ரசித்த பிரதமர் மோடி!#SunNews | #Ilaiyaraaja | @ilaiyaraaja | #PMModi pic.twitter.com/QnV1EY6Cbr
— Sun News (@sunnewstamil) July 27, 2025
