தெலுங்கானா மாநிலம் அப்துல்லாபூர் மெட் பகுதியில் ஸ்ரீனு(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் சமக்கா(35) என்ற இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமாகி சில ஆண்டுகளிலே இருவரும் பிரிந்தனர். இதனால் சமக்கா சூர்யா பேட்டையில் உள்ள தனியா வசித்து வந்துள்ளார். அவருக்கு வேற ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீனுவின் சகோதரி மகள் ராஜேஸ்வரியின் 14 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அப்போது ஸ்ரீனு மட்டும் சமக்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சமக்கா சிறுமி கேக் வெட்டும் நிகழ்ச்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஸ்ரீனு தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சமக்கா கழுத்தில் 3 இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து ஸ்ரீனு அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் சமக்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமுறைவாக உள்ள ஸ்ரீனுவை காவல்துறையினர் கைது செய்தனர்.