ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிம்ப்லோடில் நேற்று காலை அரசு பள்ளி கட்டிடம் இடைந்து விழுந்ததில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேருக்கு காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு முன்பாக மாணவர்கள் கூரையிலிருந்து கற்கள் விழுவதாக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. இது குறித்து விபத்திலிருந்து தப்பிய 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கூறியதாவது மேலே இருந்து கற்கள் விழுவதாக ஆசிரியரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எங்களை திட்டி வகுப்பறையில் உட்கார சொன்னார்கள்.

அப்போது கூரை இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தின் போது ஆசிரியர்கள் வேலை வெளியே அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர் வாசிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு மேற்பரப்பு சிமெண்ட் மற்றும் பிளாஸ்டரிங் மூலம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.