கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மூலத்துறை கிராமம் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவு ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மேச்சலுக்குச் சென்றார் 6 மாத ஆட்டுக்குட்டி ஒன்றை மலைப்பாம்பு ஒன்று விழுங்க முயன்றுள்ளது. அப்போது ஆட்டின் அலற சத்தத்தை கேட்டு வந்த அப்பகுதியில் உள்ள மக்கள் ஆட்டுக்குட்டியை மலைப்பாம்பு உடலில் சூழ்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை சூழ்ந்து இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மலைப்பாம்பிடம் இருந்து ஆட்டுக்குட்டியை மீட்டனர். இதையடுத்து மலைப்பாம்பு அருகில் உள்ள வனப்பகுதிக்குச் சென்றது. இதற்கிடையில் மலைபாபு ஆட்டுக்குட்டியை இரைக்காக விழுங்க முயன்றதை அப்பகுதியினர் வீடியோவக்காக எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.