ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 குழந்தைகள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஜலாவரில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியில் நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
