புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சமூக வலைதளத்தில் விபச்சார அழகைகளை தேடியுள்ளார். அப்போது ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் 17,999 ரூபாய் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த வாலிபர் பணம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் கிரைம் மோசடிகள் குறித்து போலீசார் நாளுக்கு நாள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் சில மோசடி நபர்களிடம் சிக்கி கொள்கின்றனர். எனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
