மகராஷ்டிரா மாநிலம் புனே கோந்த்வா பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 3-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் சம்பவத்தன்று இரவு ஒரு வாலிபர் கொரியர் டெலிவரி செய்வது போல வந்த நபர் தன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறியுள்ளார்.

மேலும் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு‌ பின்பு அங்கிருந்து தப்பி சென்றதாக புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய செல்போனில் என்னுடைய முதுகு மற்றும் அந்த நபரின் முகத்தின் ஒரு பகுதி தெரியுமாறு செல்பி எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிப்பு மிக்க ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பின்பே அந்தப் பெண் புகாரில் கூறிய அனைத்தும் பொய் என்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் அந்த பெண்ணிற்கு நன்கு தெரிந்தவர் எனவும், அந்த பெண் கூறியதாலே அந்த நபர் பெண்ணின் வீட்டிற்கு சென்றதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த செல்பி இருவரின் சம்மதத்துடன் எடுக்கப்பட்டது எனவும், அந்த பெண் அதனை மாற்றி கூறியதும் தெரியவந்தது. எனவே அந்த வாலிபரின் மீது பொய் புகார் அளித்து அவரை சிக்க வைத்ததன் காரணமாக, அந்த பெண்ணின் மீது கைது நடவடிக்கை இல்லாமல் குற்றப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.