மத்திய பிரதேச மாநிலம் மும்பை பந்த்ரா பகுதியில் 62 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது அலைபேசிக்கு புகழ் பெற்ற நிதி நிறுவனத்தின் பெயரில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக ஒரு குறுந்தகவல் வந்தது.
அப்போது அந்த நிறுவனத்தின் உதவியாளர் என பேசிய இளம்பெண் மூதாட்டியிடம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய மூதாட்டியும் அந்த இளம் பெண்ணின் வற்புறுத்தலால் அவர் சொன்ன நிறுவனத்தில் ரூபாய் 8 கோடிக்கு மேலாக பல வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றம் செய்துள்ளார்.
பின்பு இதிலிருந்து சில நாட்கள் கழித்து மூதாட்டி வங்கியில் செலுத்திய பணத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது அதில் மீண்டும் 10% பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேட்டுள்ளது. இதனால் மூதாட்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்பின்பு தான் ஏமாற்றப்பட்டதை மூதாட்டி உணர்ந்தார்.
எனவே இதுகுறித்து அவர் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
