தமிழ்நாட்டின் தலைநகரான புதுடெல்லியை சேர்ந்தவர் பீம்சென்(86). இவரது மகன் சந்தீப், மருமகள் நீலம். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் டெல்லியில் ஒரே குடும்பமாக வாழ்கின்றனர். பீம்சென் தேசிய பாதுகாப்பு படையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது இவர் கினாரி மார்க்கெட் பகுதியில் நகை கடை விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் பீம்சென் வழக்கம்போல கடைக்கு சென்ற பின்பு மகனும் மருமகளும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் சிலர் பீம்சென் வீட்டு கதவை தட்டினர். அப்போது சந்தீப் கதவை திறந்த போது முகமூடி அணிந்து துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் வீட்டினுள் புகுந்தனர். பின்பு அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டிலிருந்த பொருட்களை தேடி பார்த்தனர்.
அப்போது பீம்செனின் பேரன் அருகில் சென்ற போது அவரை கைகளைக் கட்டி வாயில் டேப் போட்டு ஒட்டியுள்ளனர். பின்பு வீட்டில் இருந்த நகை, விலை மதிப்புள்ள கற்கள் என சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பீம்சென் வீட்டிலிருந்த 3550 டாலர் மதிப்பிலான பணத்தையும் கொள்ளையடித்து விட்டு குடும்பத்தில் இருந்தவர்களை சமையலறையின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு தப்பி சென்றனர்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பின்பு சந்தீப் மற்றும் நீலம் இருவரும் கத்தி கூச்சலிட்டனர். அந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பீம்செனின் குடும்பத்தினரை மீட்டனர். பின்பு இதுகுறித்து பீம்செனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய தில் பீம்செனின் குடும்பத்தில் இருந்து ரூ. 60 லட்சத்திற்கு மேல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
எனவே கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக் தேடி வந்தனர். இந்த நிலயில் கொல்லையில் ஈடுபட்ட 3 நபர்களில் அலோக்குமார் மிஸ்ரா(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
