நவி மும்பையில் உள்ள கார்கர் பகுதியில், ஓடும் மெர்சிடிஸ் பென்ஸ் காரின் மேல் வெறுங்காலுடன் நின்று ஒரு பெண் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி பொதுமக்களிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் ஒரு சிறுவன் படகின் விளிம்பில் நடனமாடும் வீடியோவை நினைவூட்டும் வகையில், இந்த செயலும் பாதுகாப்பு விதிகளை முற்றிலும் மீறுவதை காட்டுகிறது.

வீடியோவைப் பார்த்த பலர், இது பொதுமக்களுக்கு தவறான செய்தி அளிக்கக்கூடிய செயல் என்றும், சாலை பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். @TweetToMahesh என்ற சமூக வலைதள பயனர், மும்பை காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து, “இந்த இன்ஸ்டாகிராம் பயனர்கள் பாதுகாப்பை புறக்கணித்து தவறான பாதையில் செல்வதாக ” எனக் கடும் விமர்சனம் பதிவிட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து, நவி மும்பை போக்குவரத்து காவல்துறையினர், இந்த வீடியோ எடுக்கப்பட்ட

“>

பகுதி தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்டது என்பதையும்,  இருப்பினும், இந்த வீடியோ தற்போது தங்களது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.