ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த திருமண நிகழ்வு நடைபெற இருக்கும்போது, அதற்கு ஒரே நாள் முன் மாப்பிள்ளை மீது மணமகள் ₹10 லட்சம் பணம் கேட்டு, அதை வழங்க மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Venom’ என்ற X தள பயனர் வெளியிட்ட வீடியோவின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மாப்பிள்ளைக்கு  முன்கூட்டியே சந்தேகம் ஏற்பட்டதால் , தனது மற்றும் மணமகளின் தொலைபேசி அழைப்புகளும் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் ரகசியமாக பதிவு செய்து வைத்துக்கொண்டார். இப்படிப்பட்ட நிலைமையில் அந்த வீடியோவில்  அவரிடம் நேரடி யாக கூறியது , மணமகள் முதலில் “நான் எதையும் கேட்கல” என மறுத்து அப்பாவி போல கூறுகிறார்.

பின்னர் “ஆமாம், நான் திட்டமிட்டுத்தான் சொன்னேன்” என ஒப்புக்கொள்கிற காட்சிகள் தெளிவாக உள்ளன. இந்த தெளிவான டிஜிட்டல் ஆதாரங்களை போலீசாரிடம் வழங்கியதும், வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மாப்பிள்ளை மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல், காப்பாற்றப்பட்டார்.

“>

 

இந்த சம்பவம், சமூகத்தில் தற்போது அதிகரித்து வரும் போலியான வரதட்சணை புகார்களின் ஆபத்தை வெளிக்கொண்டுவந்துள்ளது.  திருமணம் என்பது உணர்வும், நம்பிக்கையும், மரியாதையும் அடிப்படையாக கொண்ட புனித உறவாக இருக்க வேண்டியது. ஆனால் சிலர் சொந்த நலனோ, பழிவாங்கும் நோக்கத்திலோ இவ்வாறு சட்டத்தை தவறாக பயன்படுத்தும் போக்குகள், நியாயத்தின் மீது நம்பிக்கை வைத்த நல்லவர்களை கூட பாதிக்கும் சூழலை உருவாக்குகின்றன.

இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைத் தடுக்க, கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என்ற கருத்து சமூகத்தில் அதிகரித்து வருகிறது. மேலும், டிஜிட்டல் ஆதாரங்கள் இன்று நம்மளை பாதுகாக்கும் ஒரு முக்கிய ஆயுதமாக மாறியுள்ளது. உண்மையையே சொல்லும் துணிச்சல், அதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் அறிவு – இரண்டும் சேர்ந்து இன்று ஒரு மாப்பிள்ளையை  காப்பாற்றி இருக்கிறது..