உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 57 வயது மருத்துவர் ஒருவர், ஒரே பாலினத்தில் உடன்படுபவர்கள் (gay dating app) பயன்படுத்தும் டேட்டிங் ஆப்பில் அறிமுகமான நபரால் மிரட்டப்பட்டு ரூ.8 லட்சம் இழந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
ஜூலை 20ஆம் தேதி வாரணாசி நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவர், ‘விகாஸ்’ என்ற நபருடன் தொடர்பு கொண்டு, ஹோட்டல் முகவரி, மொபைல் எண்னை பகிர்ந்ததோடு, பீர் பாட்டில்கள் மற்றும் ஸ்நாக்ஸும் கொண்டு வருமாறு கூறியிருந்தார்.
இரவு 10 மணி அளவில் விகாஸ் ஹோட்டலுக்கு வந்ததும், ஆரம்பத்தில் அமைதியாக நடந்து கொண்ட அவர், பின்னர் திடீரென மருத்துவரை தாக்கியும், அவரது நிர்வாண புகைப்படங்களை எடுத்தும், கண்ணாடியை உடைத்து மிரட்டலும் செய்துள்ளார். மேலும் விகாஸ் மருத்துவரை கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
மிகுந்த பயத்தில் சிக்கிய மருத்துவர், UPI மூலமாகவும், ஏ.டி.எம் மூலமாகவும் பணத்தை எடுத்து கொடுத்துள்ளார். மொத்தமாக ₹8 லட்சம் கொடுத்த பின்னர், விகாஸ் அங்கிருந்து சென்றுள்ளான். சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவர் வாரணாசி போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணையை தொடங்கி, குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்துள்ளனர். சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் பரவி, டேட்டிங் ஆப்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
