கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி சதவத்தி தாலுகா முனவல்லி  நகரத்தை சேர்ந்த தம்பதியினர் பஞ்சாக் ஷரி(33)-வர்ஷினி (28). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் வர்ஷினி இரண்டாவது கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த ஜூலை 22 ஆம் தேதி வர்ஷினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனே ஹூப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உடனடியாக ஆபரேஷன் நடைபெற்றது.

அதில் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளனர். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்ததில் அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.