உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவர் தனது மனைவியிடம் கார் மற்றும் பணத்தை வரதட்சணையாக வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தி உள்ளார். சஞ்சீவின் மனைவி தனது பெற்றோரால் அவ்வளவு பணத்தை வரதட்சணையாக கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.

இதனால் சஞ்சு தனது மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று தனது மூன்று வயது குழந்தையை தலைகீழாக பிடித்துக் கொண்டு கிராமம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இது குறித்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் சஞ்சுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவியிடம் புகார் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.