ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூரு மாவட்டத்திலுள்ள தெந்துலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவாஜி. இவர் தன்னுடைய நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகள், அரிசி விளைவிக்கிறார்.
இந்நிலையில் நகரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருவதை கண்டு புதிய முடிவு ஒன்றை நடைமுறைப்படுத்த நினைத்தார்.
அதன்படி தனது விவசாய நிலத்தில் விளையும் காய்கறிகள், அரிசிகளை பயன்படுத்தி வெஜ் பிரியாணி சமைத்து ரூபாய் 5க்கு விற்று வந்தார்.
அதில் அதிகளவு நஷ்டத்தை சந்தித்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து ரூபாய் 10க்கு வெஜ் பிரியாணி வழங்கி வருகிறார். தற்போது வெறும் 10 ரூபாய்க்கு சுவையான வெஜ் பிரியாணி கிடைப்பதால் மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். அதனால் தனக்கு போதுமான அளவு லாபம் வருவதாகவும் விவசாயி தெரிவித்துள்ளார்.
