தமிழக முதலமைச்சர் மு =.க ஸ்டாலின் கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று லேசான தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்தவாறு அரசு பணிகளை தொடர்வதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் தனது பக்கத்தில் கூறியிருப்பதாவது, மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.