பெரம்பலூர் மாவட்டம் வேப்பன்தட்டை கிராமத்தில் ஸ்ரீவேத மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழாவின்போது தேர் சில குறிப்பிட்ட தெருக்களில் மட்டும் செல்வது கிடையாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் குறிப்பிட்ட தெருக்களில் எந்த இடையூறும் என்று தேர் செல்லும் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்று தற்போது அனைத்து தெருக்களிலும் தேர் செல்ல வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இனி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் பாகுபாடு இன்றி தேர் செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.