சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் தனது அறையில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பகல் பொழுதில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
மேலும் திடீரென அந்நியரைக் கண்ட அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து, உதவிக்காக உரக்கக் கத்தத் தொடங்கியுள்ளார். இதனால் அந்த திருடன் நிலைதடுமாறி, தப்பிக்க வழி தெரியாமல் குழப்பமடைந்துள்ளார். இதன் பிறகு நடந்த சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பெண் பயந்துபோய் கத்தத் தொடங்கியதும், அதே வேகத்தில் அந்த திருடனும் பயந்துபோய் கத்தத் தொடங்கியுள்ளான்.
दिनदहाड़े घर में घुसा अनजान शख्स, फिर जो हुआ उसे देखकर लोग रह गए हैरान-WATCH VIDEO https://t.co/bEhBCOj5R0
“>
இந்நிலையில் இருவரது அலறல் சத்தமும் ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான சூழலை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பல பயனர்கள், திருடனும் அந்தப் பெண்ணைப் போலவே மிகுந்த பயத்தில் இருந்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
