கர்நாடக மாநிலத்தில் உள்ள அவுராத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் பிரபு சவான். இவரது மகன் பிரதீக் சவான். இவர் மீது மகராஷ்டிராவை சேர்ந்த ஒரு இளம் பெண் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவரது மகன் அந்த இளம் பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் பழகிய நிலையில் பின்னர் இருவரும் காதலித்தனர்.

இவர்களது நிச்சயதார்த்தம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடைபெற்ற நிலையில் திருமண ஆசை காட்டி அந்த நபர் பல்வேறு இடங்களுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும் நிலையில் இது பற்றி நேற்று செய்தியாளர்களுக்கு அந்த பெண் பேட்டி கொடுத்தார். அந்தப் பெண் கூறும்போது பாஜக எம்எல்ஏ மகன் கூறுவது அத்தனையும் பொய். எனக்கு வேறு யாருடனும் தொடர்பு கிடையாது. அவர் பிரதமர் மோடி உள்துறை மந்திரி உள்ளிட்டோர் முன்னிலையில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் தான் அவருடன் பழகினேன்.

என்னை அவர் பல இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக எம்எல்ஏ மகனுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக அந்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.