தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் பா. ரஞ்சித் தற்போது வேட்டுவம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ் மற்றும் நடிகர் கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாகையில் கடந்த 13ஆம் தேதி இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்றது. அப்போது சண்டைக் காட்சியின் போது ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அலட்சியம் மற்றும் கவன குறைவு போன்ற பல பிரிவுகளின் கீழ் இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் தற்போது மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு 20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். முன்னதாக நடிகர் சிம்பு அவரது குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியிருந்தார். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது ரஞ்சித் அவருடைய 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக x பக்கத்தில் அறிவித்துள்ளார்.