அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் “என்ற பேரணியில் தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று வருகிறார். அதன்படி வேதாரண்யம், திருப்புத்துறைபூண்டி, நாகை ஆகிய தொகுதிகளுக்கு பயணம் செய்த போது அவர் பேசியதாவது, “ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் திமுக அரசு நாகைக்கு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

நாங்கள் மக்கள் விரும்பும் ஆட்சியை அழைத்துள்ளோம். அதனால் தான் எங்களுக்கு இவ்வளவு சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது. ஆட்சியில் அமர்ந்த பின் மக்களைப் பற்றி மட்டும் தான் சிந்திக்க வேண்டும். எங்களது ஆட்சியில் மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு என நிறைய திட்டங்களை கொடுத்துள்ளோம்.

தற்போது ஓரணியில் தமிழ்நாடு என சொல்லிக் கொண்டு வீடு வீடாக முதல்வர் ஊர் ஊராக செல்கிறார் ஏன் என தெரியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி நாடகம் நடத்துகின்றனர்/

தமிழகம் கடன் வாங்குவதில் தான் முதலிடம் பெற்றுள்ளது பிறக்கும் குழந்தையின் பெயரில் கூட ஒன்றரை லட்சம் கடனோடு தான் பிறக்கிறது. அதிமுக கூட்டணி வெற்றிக்கு மக்கள் கூட்டமே சாட்சி.

வரும் 2026 ஆம் தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெற்றதும் மாம்பழ கொள்முதல் செய்ய கீழ்வேளூர் தொகுதியில் தொழிற்சாலை அமைக்கப்படும்.

மேலும் அம்மா மினி கிளினிக் திட்டம் கொண்டுவரப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.