கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தற்போது பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி மற்றும் அரசு பேருந்து என அடுத்தடுத்து 8 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
