அதிமுக கட்சியில் எந்த நிபந்தனையும் இன்றி இணைய தயாராக இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவரை எந்த காரணத்திலும் கட்சியில் இணைந்து கொள்ள வாய்ப்பே கிடையாது என கூறிவிட்டார். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் எடப்பாடி பழனிசாமியின் காலில் கூட விழுகிறோம் தயவு செய்து அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியது பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது இன்று காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணி ஆதரவாளரான ரஞ்சித் குமார் அங்கு கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவில் ஓபிஎஸ் அணியை மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அடுத்து வரும் தேர்தலில் மூன்றெழுத்து கட்சியான திமுக தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இதற்காக நாங்கள் எடப்பாடி பழனிசாமியின் காலில் கூட விழ தயாராக இருக்கிறோம் என்று கூறினார். மேலும் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது மீண்டும் அதிமுகவுடன் இணைவதற்கான சாத்திய கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது ரஞ்சித் குமார் இப்படி ஓபன் ஆக சொன்னது மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
