குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் உள்ள சாலையில் முதலை ஒன்று சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குஜராத்தில் உள்ள விசுவாமித்திரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து நீரில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது.

அந்த முதலை சாலையில் ஊர்ந்து சென்றதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதனை சாலையில் நின்ற வாகன ஒட்டி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதை எடுத்து வைரல் ஆகி வருகிறது.

உடனே இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை பாதுகாப்பாக பிடித்து எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.