இன்றைய காலகட்டத்தில் நடக்கும் பல சம்பவங்கள் வீடியோவாக இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் ஒரு நபர் சாதாரணமாக ஒரு கடையை கடந்து செல்கிறார்.

அப்போது சார்ஜில் இருக்கும் மொபைல் போனை அவர் பார்த்த நிலையில், திரும்ப வந்து சார்ஜில் இருந்து அகற்றி விட்டு சென்றார். கடையிலிருந்த 2 தொழிலாளர்கள் தங்களது வேலையை மும்மரமாக செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இந்த நபர் சார்ஜில் இருந்து  அகற்றிய  மொபைல் போனை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு  தப்பி  சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் கடைக்காரர்களுக்கு தெரியாமல் நடந்தது என்பதே அதிர்ச்சிகரமான உண்மை. தற்போது இந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள்  பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதில் ஒருவர் ”அந்த நபர் டிப்ளமோ முடித்த திருடன் போல தெரிகிறார்” என்றும், இன்னொருவர் ”யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாமல் செயல்பட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இந்த வீடியோ தற்போது திருடர்களின் புத்திசாலித்தனத்தையும், பொதுமக்களின் கவனக்குறைவையும் வெளிப்படுத்தும் சம்பவமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.