இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஹோட்டல் வைத்திருக்கும் முதியவரிடம் யூடியூபர் ஒருவர் பாதி பிளேட் சாப்பாடு போதும் என்று கேட்கிறார்.
Kalesh b/w Baba Da Dhaba and Vlogger over Half Plate
pic.twitter.com/6cc9Qrkqvo— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 17, 2025
இதையடுத்து அந்த முதியவர் ஒரு பிளேட்டை எடுத்து அதை பாதியாக வெட்டி அதில் சாப்பாடு, குழம்பு, கூட்டு வைத்து கொடுக்கிறார். இதனை பார்த்த யூடியூபர் அதிர்ச்சியடைந்து நிற்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
