இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின். இவரது மூதாதையருக்கு சொந்தமான வீடு ஒன்று வங்கதேசத்தில் உள்ளது. அதனை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக அந்த நாட்டின் அரசு முடிவெடித்துள்ளதால் அந்த நாட்டில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனால் இந்தியா- வங்கதேசம் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. எனவே இந்த நடவடிக்கையை கைவிடுமாறு இந்திய அரசு வங்காள அரசுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில் இந்திய அரசு கூறியதாவது சத்தியஜித் ரேயின் மூதாதையர் கட்டிய வீட்டை புரணைப்பதற்காக இந்தியா அரசு உதவி செய்வோம் என தெரிவித்திருந்தது.
எனவே சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டினை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் எவ்வாறு கட்டுவது என்பது குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
