ஐரோப்பாவில் உள்ள அயர்லாந்து நாட்டில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்த நாட்டின் தலைநகரான ரெய்க்காவிக்கில் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை நேற்று அதிகாலையில் வெடித்து சிதறியது.
இதனால் அந்த பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டு வெடிப்பு நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 கிலோ மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென் கிழக்கு நோக்கி பாய்ந்து வருகிறது.
எனவே அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த எரிமலை சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
